பாரத விடியலில் பாரதி
- பாரதிஅடிமைச்சுமையைப் புரட்டபாட்டு நெம்புகோல்எடுத்தவன்
காலவெள்ளத்தில்மூழ்கிக்கொண்டிருந்த தமிழ்க்கவிதையைபுதுவிசையோடு பாய்ந்துமீட்டெடுத்த முண்டாசுக்கவி
நூற்றாண்டுப்புழுக்கத்தில்இருந்தபாரத மக்களுக்குபாட்டு சன்னல்களைத் திறந்துசுதந்திரக்காற்றைச் சுவாசிக்கத் தந்தவன்
பாரதிகாந்தியின் மொழிபெயர்ப்புநேதாஜியின் மறுபதிப்பு
பாரதிஅதுவரைக்கருவறைகளில் இருந்தகடவுளர்களைத் தன்கவியறைகளுக்குள் கொண்டுவந்தவன்
அவன் திருப்பள்ளியெழுச்சிபாடியதுதெய்வங்களுக்காக அல்லபக்தர்களுக்காக
அவனுக்கும்கண்ணனுக்கும் இடையேசாத்திரங்கள் இல்லைசங்கமம் இருந்தது
அவனுக்கும்காளிக்கும் இடையே இருந்ததுஅச்சம் அல்லஅன்பு மட்டுமே
பாரதிகடைசிவரைக்கும் தந்தகவிதைஅவலைத் தின்று விட்டுமாற்றுத்தராமல்மாதவனால் கைவிடப்பட்ட சுதாமன்
காலத்தோடு சமரசம்செய்துகொள்ளத்தெரியாதஅரை சமத்தன்
வறுமைஅவன் அமர்ந்திருந்தஓட்டைப்பாயையும் உருவிக்கொண்டதுஅவனோசாத்திரங்களைக் கலைத்துப்போட்டுத்தனக்குச்சிம்மாசனம் செய்துகொண்டான்
கடவுளர்கள் மட்டுமாகைவிட்டது அவனை ?
தமிழ்ச் சமூகம்அவனுக்கு அன்றுதர மறுத்தகௌரவம் குறித்த இன்றும்பரம்பரை பரம்பரையாய்குற்ற உணர்ச்சியோடு வாழ்கிறது
அதற்குப் பரிகாரமாகத்தான்கவிதைஎன்று இன்றுயார் என்ன எழுதினாலும்கவிஞன் என்று சொல்லிஎழுந்து நின்று கைதட்டுகிறது
எனக்கானகவிஞன் பட்டமும்பாரதியின் அவமானத்தில்பயிரானதுதான்
குருடர்கள்யானையைத் தடவிப்பார்த்துச்சொன்னது போலத்தான் பாரதியைபாரதம் அறிந்திருக்கிறது
அறிவுக் கண்திறந்து பார்ப்போம்கவிதையானை ஒன்று காலங்கடந்துநமக்காகக் காத்துநிற்கிறதுதன் திரண்ட நம்பிக்கையோடு
No comments:
Post a Comment