வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Sunday, July 3, 2011

கவிஞர் கழுகுமலை இல. ஸ்ரீகாந்த்

உண்மை தருமே நன்மை

பூட்டிய அறைக்குள்
சத்தியத்தின் வியாக்கியாணங்கள்
உரக்கச் சொல்லியும் ஒருவருக்கும்
உரைக்கவில்லை

அதிகாரம் பத்தும்
இன்று பத்தோடு பதினொன்று

சீலர்கள் பேச்செல்லாம் இங்கே
சில்லறைக் காசாகிப் போனது.

ஊழல் உன்மத்தர்கள் ஒன்று கூடி
ஊழலுக்கு எதிராய் மசோதா செய்தால்
பாதுகாப்பாய் வாழும்- ஊழல்
அப்போது
அங்கிகரிக்கப்பட்ட ஊழல்- நம்
அத்தியாவசிய வாழ்வா தாரமாகிப்போகும்

குரல் கொடுப்போர் எல்லோரும்
அங்கிகரிக்கப்படுவதில்லை

நீதி மன்றங்களில் மாறி மாறி
வாசிக்கப்படும் தீர்ப்புகலெல்லாம்
நியாயம் என்று எவன் சொன்னவன்?.

நாற்பது ஆண்டுகள் கழித்து
நல்லதைச் சொல்ல நமக்கெதற்குச் சட்டம்.
நாலு வயதில் ராமன் கூனிக்கு செய்த ஊரு.

பதிநாலு வயதில் அவன்
கானகம் செல்ல கொடும் பாவி
கூனிக்குத் தண்டனை எந்த வயதில்
சரித்திரத்தில் இல்லவே இல்லை

அறைக்கச்சை அண்ணலும்
உண்மையை
உயிராகக் கொண்டார்
உயர்ந்தார்.

ஆனால்

நாம் உண்மையை
ஊறுகா யாகக் கூட தொடாமல்
அதன் நன்மையைப் பற்றி பேச
அருகதை நமக்கில்லை.

முதலில் தைரியமாய்
உங்கள் வருமானத்தை
குடும்ப அட்டையில் போடுங்கள்
பிறகு ஊர் நியாயம் பேசலாம்.

No comments:

Post a Comment