வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Wednesday, May 11, 2011

கவிஞர் தி.கண்ணன்

                                                             " பூக்கட்டும் புதிய பூக்கள் ! " 

சிங்கத்தின் பிடியிலா
சிறுத்தையின் வாயினிலா
மனித மான்களின் 
விழிகள் பிதுங்குகிறது ;
இருளடர்த்த காடுகளில் 
ஒளிபூவை தேடி.....

எருக்கம்பாலும் 
ஊமத்தம்  பூவும் 
ஊமைகளின் குடலையும் 
உடலையும் அணிவகுக்க 
கனவுகளில் மட்டுமே
ரோஜாபூ.

காணல் நீரில் 
குடிநீர் குடிக்கும் 
ஒட்டகங்களில் 
நினைவுகளில்தான் நிழலாடுகிறது 
சோலை பூக்கள் 
  
தோண்டினால் வரும் 
நம்பிக்கை மணற்கேணி 
தோண்ட தோண்ட வருகிறது 
நில அதிர்வும் சுனாமியும் 
உடைந்த  கண்ணாடியில் 
ஒட்டவைத்து 
உருவம் பார்த்திடவும் ;

ஒற்றை அரிசியில் 
குறள் எழுதவும் !
படிக்கவும் 
உலகசாதனையை - எம் 
பிஞ்சு விரல்கள் 
உலுக்கிடவும் 
இனி 
நிதம் நிகழும் 
நிஜம் 
நிஜ நீரூற்றில் 
இளம் பூக்கள் 
இனிய காலையை 
எழச் செய்யும் 
இருள் உடைந்திட 
மனிதம் மலர்ந்திடும் 
பேதத் தீ மடிந்திட 
கள்ளி(ளு)ப் பாலில் 
கண்ணீர்ப் பூக்கள் 
விளையாது 
அக்கினிப் பூக்கள் 
பூத்திட
பூக்கட்டும் புதிய பூக்கள்

No comments:

Post a Comment