நீதி காத்த மன்னர்களின்
செங்கோல்
பிரதி எடுக்கப்பட்டு
நீதிமன்றத்தில் டவாலியிடமும்
கலெக்டரின் டபேதாரிடமும்
தரப்பட்டுள்ளது
செங்கோல்
சீருடையின் ஓர் அங்கம்
நீதிமன்றங்களில்
நீதிபதிகள்
கருத்து கந்தசாமிகளாய்
மாறிப்போனர்கள் !
செங்கோல்
எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடும்
ஜனநாயகத்தின் மன்னர்களுக்கு
கைத்தடி!
உரிமைகேட்டுப் போராடுபவர்களை விரட்ட
போலீஸ் கையில் கொடுக்கப்பட்ட
லத்தி !
கட்டப்பஞ்சாயதுக்காரர்கள் கையில்
உருட்டுக்கட்டை !
அரசியல் சட்டத்தின் ஒட்டைகளிலேயே
நீதிபரிபாலனங்கள்
மன்னர்களின் கஜான மந்திரிகள்ளலேயே
கொள்ளையடிக்கப் படும் வினோதம் !
வாருங்கள் கவிஞ்கர்களே!
எட்டயபுரத்தானின் எழுத்தின் ஈரத்தில்
உங்கள் எழுதுகோலை நனையுங்கள்
ஜனநாயகத்தின் மூன்று தூண்களும்
உளுதுப்போனத்தால்
எழுதுகோல் தான்
இனி மற்றுத்தூண் !
கடைக்கோடி மனிதனின்
கவலைகளை உங்கள்
கருவில் ஏற்றுங்கள் .....
உங்கள் எழுதுகோல்
ஒவ்வொரு முறை
கவிழும்போதும்
நிமிர்துநிற்கும் செங்கோலாய் !
புதியவிதிகளோடு விடியலுக்காய் !
-இளசை கிருஷ்ணமூர்த்தி
No comments:
Post a Comment