வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Saturday, June 18, 2011

வாசல் வசந்தப்பிரியன் -தலைவர் ,வாசல் கவிதை அமைப்பு

                                    எழுதுகோல் எமது செங்கோல் 

கவிஞ்ர்கள் கழகம் தொடங்கவேண்டும் !
கவிஞ்ர்கள் அத்துணை பேரும் அதில் அடங்கவேண்டும் !
ஆட்சியில் பங்கு கேட்காதோரிடம் கூட்டணி வைக்க வேண்டும் 
தனித்தே ஆட்சிஅமைக்கும் எண்ணிக்கையில் போட்டியிட வேண்டும் !

"கவிஞ்ர் " என்ற பெயரில் தனித்தொலைக்காட்சி"சேனல் " வேண்டும் 
எழுதுகோல் எமது செங்கோல் என்று அறிக்கை ஒன்று விட வேண்டும்
'எல்லோரும் இந்நாட்டு மன்னர் 'என்பதை நிரூபிக்க
எல்லா மக்களுக்கும் ஒரு எழுதுகோல் இலவசமாகத் தரவேண்டும் !

பட்டுக்கோட்டையின் பாட்டுவரிகள் கோட்டையில் முழங்கும் 
கவர்னர் உரை முழுவதும் கவிநயம் ஜொலிக்கும் !

எழுதுகோல் தினம் பிடிக்கும் எனதருமை நண்பர்களே !
எழிற் கவிதை தினம் வடிக்கும் என் இனிய கவிஞ்ர்களே !
எழுதுகோல் எமது செங்கோல் என்பதை ஒவ்வொரு முறை 
உச்சரிக்கும் போதே 
ஆட்சியே உங்கள் கைக்கு வந்துவிட்ட 
அதிசயத்தை அனுபவிப்பிர்கள் !

எழுதுகோல் எமது செங்கோல் என்ற
என் உ தடுகளின் உச்சரிப்புக்குப் பின்னால்
ஆட்சி ஒன்று மலரும் அதிசயம் தெரிகிறது !
எழுதுகோல் ஒன்று செங்கோலாய் மாறும் 
காட்சி ஒன்று கண்முன்னே சாட்சி ஆகிறது !

No comments:

Post a Comment