வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Friday, June 17, 2011

அரங்கத் தலைவர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன்

கவிதை நமது செங்கோலாய்க்
         கருதி வந்த கவிஞ்ர்களே
செவியைத் தந்தோம் உம்மிடமே 
         சிந்தை நிற்கும் உம்மிடமே 
புவியை ஆளும் புலமையினால்
          பூவின் மணத்தைத் தருவீரே !
சுவைக்க நாங்கள் இருக்கின்றோம் 
          சொல்ல வாரீர் கவிதைகளை 

கவிதைச் செங்கோல் ஏந்தியவர் 
         காணும் உலகின் கயமைகளை 
புவியில் நீக்க முனைவார்கள்
         புதுமை படைக்க எழுவார்கள் 
குவியும் அன்பால் எழுத்தெல்லாம் 
         கூவும் குயிலால் எதிரொலிக்கும்
எவரும் நாங்கள் பெற்றிடவே 
         என்ன சொல்லப் போகின்றீர் 

No comments:

Post a Comment