வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Saturday, March 12, 2011

வாசல் வசந்தப்பிரியன் - தலைவர் வாசல் கவிதை அமைப்பு


வாழும் வாழ்வே வரலாறு

அழுது கொண்டே பிறக்கிறோம் - பிறரை
அழ வைத்து இறக்கிறோம் !
இடைப்பட்ட வாழ்க்கையோ பலவாறு - அதில்
இடம்பெற்று விடுவதே ' வரலாறு ' !

வாழ்வின் அடிப்படை 'மனிதம்' ! - ஒரு
வரலாறு ஆக்கல் 'புனிதம்' !
சென்றடைவோம் சிவலோக பதவி - அதற்குமுன்
செய்திடுவோம் சிலபேர்க்கு உதவி !

உணர்வுகள் மனதைத் தொடும்வரை - பல
உறவுகள் என்றும் தொடர்கதை !
உயிர்களை வாழ்வு பாராட்டும் - அதில்
உன்னதம் அன்றோ தேரோட்டம் ?

உலகம் பலவிதம் இயங்கும் - சில
உண்மைகள் வெளிவரத் தயங்கும்  !
நிதர்சனம் எல்லாம் பல சாட்சி - வரும்
விமர்சனம் காட்டும் மனசாட்சி !

இரக்கம் உதவும் கரமாகும் - அது
இறைவன் தந்த வரமாகும் !
உறவுகள் போற்றிக் குலவிடும்வோம் - சிறு
உதவிகள் புரிந்து உலவிடுவோம்  !

வாழ்கை என்பது வரலாறு - இடையில்
வருமே பற்பல இடையூறு  !
சுற்றிலும் வெற்றிகள் வசமாகும் - அதை
பெற்றபின் சொர்க்கமும் நிசமாகும் !

மனிதர் மத்தியில் நடமாட்டம் - அதற்கு
இடையில் எதனை இடமாற்றம் ?
நினைவில் நிற்போர் சிலபேரே ! -எழும்
நீரின் குமிழி பலபேரே !

தொடங்கும் இடமோ  கருவறைதான் - உடல்
முடக்கும் இடமோ கல்லறைதான் !
வாழ்கை இங்கே விடிகிறது - ஒருநாள்
வாழ்க்கைப் பயணம் முடிகிறது !

வாழ்க்கை என்பது தவமாகும் - அது
வாழும் புண்ணியத் தலமாகும் !

காலங்கள் யாவும் மெய்பாடும் - எடுத்த
காரியம் யாவும் கைகூடும் !

பாதையில் வெற்றி மலர்தூவும் -ஒரு
பார்வையைச் சுற்றி மனம்தாவும் !

உலக வாழ்வே  சாகசம்தான் - அதை
உணர்ந்து  வாழ்தல் சாதனைதான் !

வையகம் உணர்ந்தும் பலநூறு - அதில்
வாழும் வாழ்வே வரலாறு




No comments:

Post a Comment