வாழும் வாழ்வே வரலாறு
வாழ்க்கை என்பது வரலாற்றேடு
வாழ்நாள் என்பது அதன்பக்கம்
மரணம் என்பது அதன் விலை
மறுபதிப்பாவதே அதன் புகழ்
மறக்கமுடியுமா மகாக்கவி பாரதியை -மீண்டும் ஒருவர்
பிறக்கமுடியுமா இனிமேலே !அவர்போலே !புவிமேலே!
அந்நியர் ஆட்சியில் அச்சம் என்பதை ஆளப்புதைத்தனே
அடிமை மக்களை தட்டி எழுப்பி ஆண்மை அளித்தானே
புண்ணிய பாரதம் போல் எது நாடென்று போற்றிப் புகழ்ந்தானே
புதிய தீபமாய் தேச பக்தியை ஏற்றி மகிழ்ந்தானே
தாயின் மணிக்கொடி வானில் பறந்திட கனவுகள் கண்டானே
தாக்கிய புயலாய் தேசிய முழக்கம் தவம்போல் புரிந்தானே
வந்தேமாதரம் !வாழியபாரதம் !என முரசறைந்தனே
வென்றால் சுதந்திரம் இன்றேல் மரணம் என்றுயிர் கொடுத்தானே
புவிப்புகழ் போதும் என நாற்பது முன் புறப்பட்டுப் போனானே
வாழும் வழியே வரலாறொன்றை வழங்கிச் சென்றானே!
வாழ்க்கை என்பது வரலாற்றேடு
வாழ்நாள் என்பது அதன்பக்கம்
மரணம் என்பது அதன் விலை
மறுபதிப்பாவதே அதன் புகழ்
No comments:
Post a Comment