வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Tuesday, March 15, 2011

ஸ்ரீனி அரவிந்த்


வாழும் வாழ்வே வரலாறு

இரவும் பகலும் தினமும் வருவதற்கும் 
நீயும் நானும் பிறந்து இறப்பதற்கும் 
அர்த்தம் சேர்ப்பது நடுவின் நிகழ்வுகள்தாம்!

அர்த்தமுள்ள வார்த்தை வரிசை வாக்கியமாகும்.
பயன் தரும் வாக்கியம்தான் பொன்மொழியாகும்!

காந்தியின் அகிம்சையும் பகத்சிங்கின் வீரமும் 
பாரதியின் கவிதையும் விவேகனந்தரின் சகோதரத்துவமும் -உன்
வாழ்வில் பிரதிபலிக்காமல் உனக்கென்ன பயன்
அதனால்  இந்த ஊருக்கென்ன பயன்!

ஓடும் நீர்தான் ஊருக்கு நன்மை!
தேங்கி நின்றால் நாறும் தன்மை!

நேற்றைய மனிதரின் வாழ்கையின் சாரம் 
இன்றைய உலகம் பின்பற்றி வாழ்ந்தால் 
வாழும் வாழ்வே வரலாறாகும்அன்றி
என்றாவதொருநாள் பழங்கதையாய் மறந்து போகும்!

No comments:

Post a Comment