தெரிஞ்சிகோப்பா
அழகு அணிலே உந்தன் முதுகிலே
அழகாய் மூன்று கோடுகள் தன்னை
வரைந்து விட்டது யார் சொல்?
அது எனக்கு தெரியா தப்பா!
புள்ளி மானே உன் முதுகினிலே
பொட்டு பொட்டாய் புள்ளிகள்
இட்டுவிட்டது யார் சொல்?
ஒட்டு! எனக்கு தெரியா தப்பா!
பாயும் புலியே உன் பழுப்பு வண்ண முதுகினில்
பாங்காய் கருப்பு வண்ணக் கோடுகள்
தீட்டி விட்டதார் தெரியச் சொல்லு?
பையா எனக்கு மெய்யாய் தெரியா தப்பா!
ஒட்டைச் சிவிங்கியாரே உம் கழுத்தும்
ஓங்கி உயர்ந்து நெட்டையாய்
நிற்கச் செய்வது யார் ; நினைவிருக்கா?
நிசமாய் கூறுகிறேன் தெரியாதப்பா!
பானை வயிறுயானையாரே உம்முகத்தில்
பருத்து நீண்டு தொங்கு துதிக்கை
பொருத்தி வைத்தது யார் சொல்?
போப்பா எனக்கு தெரியாதப்பா!
இத்தனையும் தந்தவர் யாரென உனக்கு
இதோ சொல்லுகிறேன் கேள் தம்பி
அத்தனையும் தந்தவர் அவரே இறைவன்
ஒருவன் அவனே எழ்வரைக்கடியான்
No comments:
Post a Comment