துட்டு வந்து ஓட்டும் போது
கிட்டவந்து ஓட்டுவார் - தங்கத்
தட்டு என்றும் பட்டு என்றும் ..
மெட்டு கட்டிப் பாடுவார்
துட்டு எல்லாம் கெட்டுப் போனால்
எட்டி உடைப்பார்:திட்டி முடிப்பார்......
திட்டி விதமாகப் பேசி - நெஞ்சைச்
சுட்டு விடுவார்; குட்டி விடுவார்...
கட்டுக் கட்டாயத் தொகையிருந்தால் காலைத்
தொட்டுக் கண்ணில் ஒற்றித் தொழுதிடுவார்..
பெட்டித் துட்டு விட்டுப் போனால்
இட்டுக் கட்டி வெட்டி விடுவார்....
பட்டுப் போனால் கொட்டிவிடுவார்
பட்டி என்றும் வெட்டி என்றும்
மட்டமாகப் பேசி - நம்மைத்
தட்டி விட்டு எட்ட ஓடுவார்
முட்டி நிற்கும் துன்பக்கட்டை
எட்டி உதஈத்து ஒட்டவே -நமக்குள்ளே
ஒட்டியுள்ள நெஞ்சமன்றி
விட்டால் வேறு துணையும் யாரோ?
வெ. அரங்க ராசன் கவிதை
No comments:
Post a Comment