வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Sunday, February 13, 2011

வாசல் வசந்தப் பிரியன் கவிதை

ஊற்று நீர் அருவியென உயர்கருத்து பெருக்கெடுக்கும் 
 நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் அதற்கு உருக்கொடுக்கும்

பாயிரமாய்ப் பதிந்து பல்நோக்கப் படம் பிடித்து
ஆயிரத்து முன்னூறு முப்பதாகக் குறள் தடம் பிடித்தது

நன்றே உரைத்திடலாம் நல்வாழ்வு செழிப்புறவே 
ஒன்றே முக்காலடி உணர்த்தியது உலகு வியபபுறவே

வாழும் வகையதனை வளமாய்த் தொகுத்துரைக்கும் 
ஏழுசீர் அமைந்து எழிலுறவே எடுத்துரைக்கும்

என்ன சொல்லவில்லை?எல்லாமே தொட்டது எல்லை
சின்னக் குறள் எதையும் சொல்லாமல் விட்டதில்லை 

அலைகடல் ஓரத்தில் அதிகார உயரத்தில்
சிலையாக நிற்கின்றார் குறள் தந்த வள்ளுவனார் 

எங்குக் வாழும் மக்களுக்கும் எற்றகுரல் தந்ததினால்
பொங்கிவந்த 'சுனாமி'கூடத் தழுவி முத்தம் தந்ததுவே 

முப்பாலில் வடித்திட்டார் முத்தான சொல்லையே 
ஒப்பாச் சொல்வதற்கு ஒருநூலும் இல்லையே 

அருக்கருத்து அடங்கிபட்ட மெய்யடக்க மதிப்பு
கரங்களிலே தவழ்கிறதே கையடக்கப் பதிப்பு
  
தரிசாகக் கிடக்கும் மனிதனின் மனவெளியில்
பரிசைக் கிடைக்கும் குரல்தான் தளிர்விடுமே

உலகப்பொதுமறை தந்தது தங்கத் தமிழகமே 
உணர்வில் பொதுமை கண்டது சிங்கத் தமிழினமே 

வாழ்வு சிறக்க வானளவும் வள்ளுவமே ஊட்டம்
தலைனகர்தன்னில் தேருடன்கூடிய வள்ளுவரின் கோட்டம்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் 
பாட்டளியில் பறந்து வருகின்ற இக்குறள் -
கூட்டணிக்கும் பொருந்தி வருகிறதே

மழலை செல்வங்கள் மனப்பாடம் செய்கின்றார்
குழலின் இசைபோலே குரலோசை (குறள் ஓசை ) தருகின்றார்

ஆழ்கடலாம் குறளில் ஆயிரமாய் முத்துக்கள்
வாழ்நாளில் நாம்காணும் வளமான சொத்துக்கள்  

குறளுக்கு உரைகண்டார் பதிப்புலகில் பலருண்டு 
குறளுக்கு கரைகண்டார் பூவுலகில் யாருண்டு?

வள்ளுவரின் கருத்துகள் பற்பலவும் குன்றம் 
வள்ளுவரின் பெயராலே பலப்பலவாய் மன்றம் 

வள்ளுவரைத் தரிசித்தோம் குறளின் இருவரியில் 
வள்ளுவத்தை அர்ச்சித்தோம் குறளின் முகவரியில் 

உலகப் பொதுமறையால் ஒன்றுபடுவோம்-மட்டைபந்தில் 
உலகக் கோப்பையை வென்றுவிடுவோம் 

உரைவீச்சு உள்ளவரை குறள் எடுப்போம் 
உயிர் மூச்சு உள்ளவரை குரல் கொடுப்போம்    

    


No comments:

Post a Comment