பிறப்பொக்கும்
பெற்றவள் குருதியது சிவப்பாயிருக்க
மற்றவள் உதிரம் மட்டும்
மறு நிறம் காணுமோ?
தாயின் மடி அடி
தவறிப்பிறந்தோம்
இதில் சூத்திரம் எங்கே?
மனு சாத்திரம் எங்கே ?
விழுந்தோம் இத்தரையில் நம்
விதியை முடிப்ப தற்கே
எல்லோரும் எனக்கு மட்டம்
என எகத்தாளம் போடுவோரே
எத்தொழில் செய்யினும்
ஏளனம் ஆகுமோ ?,
எண்ணிப் பார்ப்பீர் - சற்றே
மற்றவர்கள் மறுத்தே உம்மை
ஒதுக்கி வைத்தால்
மழிக்காத சடா முடி
கசங்கிய பட்டாடை
சுத்தமற்ற வீதி
துர் நாற்றமாய் கழிப்பறை
அடுக்கிக் கொண்டே போகலாம்
அவனின்றி நீ இல்லை
இத்தொழில் சிறிதென்றும் இஃது
ஏற்றமென்றும் சொல்லலாமோ.,
அறிந்தே செய்திட்ட
அவலங்கள் தீர்ந்திடவே
அய்யனும் சொல்லிச் சென்றான்
பாரதி ஏற்று வாழ்ந்தான்
பிறந்தோம் நிம்மதியாய்
வாழ்வோம் மனிதர்களாய்
எந்த நிறம் இருந்தாலும்
அவை யாவும் ஒரே தரமன்றோ
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமை யான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment