இந்த ஆண்டாவது
காதலி அமைய வேண்டும் என்று
ஒரு கூடை ரோஜாக்களைத்
தாங்கிய அட்டைகளுடன்.
ஓடும் இளைஞர்களே
கவனியுங்கள்
உங்கள் எதிரிகாலம்
களவாடப் பட்டுக் கொண்டிருக்கிறது
கவிரிமா அன்ன மாணவி
உயிர் துறக்க
பனைத் துணை குற்றத்தையும்
தினைதுனையாகக் கொள்ளும்
சிறுமக்கள் கையில் தேசம்
தியாகிகளின் இரத்தத்தில்
குளித்துக் களிக்கும்
அரசியல் வியாபாரிகள்
ஏற்பிடித்தவனுக்கு எலிக்கறியும்
விளைச்சலத் தந்தவனுக்கு
விஷத்தையும் பரிசளிகிறார்கள்
விழியின்றி குலைந்து போய் நிற்கும்
தேசத்தின் விதி மாற்ற வேண்டாமா
"பொய்மையும் வாய்மையிடத்து "
என்பதை மட்டும் மனதில்
தைத்தவர்களை
மறுதலிக்க வேண்டாமா ?
இளைஞனே!
கேள்
மெய்ப்பொருள் காண்
வாய்மை வலி என்றுணர்
கைகூடும் காலம்
தவறிவிட்டால்
ஞாலம் இல்லை உனக்கு
No comments:
Post a Comment