வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Sunday, February 13, 2011

வாசல் வசந்தப் பிரியன் கவிதை

ஊற்று நீர் அருவியென உயர்கருத்து பெருக்கெடுக்கும் 
 நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் அதற்கு உருக்கொடுக்கும்

பாயிரமாய்ப் பதிந்து பல்நோக்கப் படம் பிடித்து
ஆயிரத்து முன்னூறு முப்பதாகக் குறள் தடம் பிடித்தது

நன்றே உரைத்திடலாம் நல்வாழ்வு செழிப்புறவே 
ஒன்றே முக்காலடி உணர்த்தியது உலகு வியபபுறவே

வாழும் வகையதனை வளமாய்த் தொகுத்துரைக்கும் 
ஏழுசீர் அமைந்து எழிலுறவே எடுத்துரைக்கும்

என்ன சொல்லவில்லை?எல்லாமே தொட்டது எல்லை
சின்னக் குறள் எதையும் சொல்லாமல் விட்டதில்லை 

அலைகடல் ஓரத்தில் அதிகார உயரத்தில்
சிலையாக நிற்கின்றார் குறள் தந்த வள்ளுவனார் 

எங்குக் வாழும் மக்களுக்கும் எற்றகுரல் தந்ததினால்
பொங்கிவந்த 'சுனாமி'கூடத் தழுவி முத்தம் தந்ததுவே 

முப்பாலில் வடித்திட்டார் முத்தான சொல்லையே 
ஒப்பாச் சொல்வதற்கு ஒருநூலும் இல்லையே 

அருக்கருத்து அடங்கிபட்ட மெய்யடக்க மதிப்பு
கரங்களிலே தவழ்கிறதே கையடக்கப் பதிப்பு
  
தரிசாகக் கிடக்கும் மனிதனின் மனவெளியில்
பரிசைக் கிடைக்கும் குரல்தான் தளிர்விடுமே

உலகப்பொதுமறை தந்தது தங்கத் தமிழகமே 
உணர்வில் பொதுமை கண்டது சிங்கத் தமிழினமே 

வாழ்வு சிறக்க வானளவும் வள்ளுவமே ஊட்டம்
தலைனகர்தன்னில் தேருடன்கூடிய வள்ளுவரின் கோட்டம்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல் 
பாட்டளியில் பறந்து வருகின்ற இக்குறள் -
கூட்டணிக்கும் பொருந்தி வருகிறதே

மழலை செல்வங்கள் மனப்பாடம் செய்கின்றார்
குழலின் இசைபோலே குரலோசை (குறள் ஓசை ) தருகின்றார்

ஆழ்கடலாம் குறளில் ஆயிரமாய் முத்துக்கள்
வாழ்நாளில் நாம்காணும் வளமான சொத்துக்கள்  

குறளுக்கு உரைகண்டார் பதிப்புலகில் பலருண்டு 
குறளுக்கு கரைகண்டார் பூவுலகில் யாருண்டு?

வள்ளுவரின் கருத்துகள் பற்பலவும் குன்றம் 
வள்ளுவரின் பெயராலே பலப்பலவாய் மன்றம் 

வள்ளுவரைத் தரிசித்தோம் குறளின் இருவரியில் 
வள்ளுவத்தை அர்ச்சித்தோம் குறளின் முகவரியில் 

உலகப் பொதுமறையால் ஒன்றுபடுவோம்-மட்டைபந்தில் 
உலகக் கோப்பையை வென்றுவிடுவோம் 

உரைவீச்சு உள்ளவரை குறள் எடுப்போம் 
உயிர் மூச்சு உள்ளவரை குரல் கொடுப்போம்    

    


வெ. அரங்க ராசன் கவிதை


துட்டு வந்து ஓட்டும் போது 
கிட்டவந்து ஓட்டுவார் - தங்கத் 
தட்டு என்றும் பட்டு என்றும் ..
மெட்டு கட்டிப் பாடுவார்

துட்டு எல்லாம் கெட்டுப்  போனால் 
எட்டி உடைப்பார்:திட்டி முடிப்பார்......
திட்டி விதமாகப் பேசி - நெஞ்சைச் 
சுட்டு விடுவார்; குட்டி விடுவார்...

கட்டுக் கட்டாயத் தொகையிருந்தால் காலைத்
தொட்டுக் கண்ணில் ஒற்றித் தொழுதிடுவார்..
பெட்டித் துட்டு விட்டுப் போனால் 
இட்டுக் கட்டி வெட்டி விடுவார்....

பட்டுப் போனால் கொட்டிவிடுவார்
பட்டி  என்றும் வெட்டி என்றும் 
மட்டமாகப் பேசி - நம்மைத் 
தட்டி விட்டு எட்ட ஓடுவார்

முட்டி நிற்கும் துன்பக்கட்டை 
எட்டி உதஈத்து ஒட்டவே -நமக்குள்ளே
ஒட்டியுள்ள நெஞ்சமன்றி
விட்டால் வேறு துணையும் யாரோ? 
  

வெ. அரங்க ராசன் கவிதை 

Friday, February 11, 2011

இளசை.கிருஷ்ணமூர்த்தி கவிதை

இந்த ஆண்டாவது
காதலி அமைய வேண்டும் என்று 
ஒரு கூடை ரோஜாக்களைத் 
தாங்கிய அட்டைகளுடன்.
ஓடும் இளைஞர்களே 

கவனியுங்கள் 
உங்கள்  எதிரிகாலம் 
களவாடப் பட்டுக்  கொண்டிருக்கிறது 

கவிரிமா அன்ன மாணவி 
 உயிர் துறக்க 
பனைத் துணை குற்றத்தையும்
தினைதுனையாகக் கொள்ளும் 
சிறுமக்கள் கையில் தேசம்  

தியாகிகளின் இரத்தத்தில்
குளித்துக் களிக்கும் 
அரசியல் வியாபாரிகள் 

ஏற்பிடித்தவனுக்கு   எலிக்கறியும் 
விளைச்சலத் தந்தவனுக்கு
விஷத்தையும் பரிசளிகிறார்கள்

விழியின்றி குலைந்து போய் நிற்கும்
தேசத்தின் விதி மாற்ற வேண்டாமா 
"பொய்மையும் வாய்மையிடத்து "
என்பதை மட்டும் மனதில் 
தைத்தவர்களை 
மறுதலிக்க வேண்டாமா  ?

இளைஞனே! 
கேள் 
மெய்ப்பொருள் காண்

வாய்மை வலி என்றுணர்

கைகூடும் காலம் 
தவறிவிட்டால் 
ஞாலம் இல்லை உனக்கு 

   
   
    

Thursday, February 10, 2011

குழந்தை கவிஞர் எழ்வரைக்கடியான்

தெரிஞ்சிகோப்பா

அழகு அணிலே உந்தன் முதுகிலே
அழகாய் மூன்று கோடுகள் தன்னை
வரைந்து விட்டது யார் சொல்?
அது எனக்கு தெரியா தப்பா!

புள்ளி மானே உன் முதுகினிலே
பொட்டு பொட்டாய் புள்ளிகள்
இட்டுவிட்டது யார் சொல்?
ஒட்டு! எனக்கு தெரியா தப்பா!

பாயும் புலியே உன் பழுப்பு வண்ண முதுகினில்
பாங்காய் கருப்பு வண்ணக் கோடுகள்
தீட்டி விட்டதார் தெரியச் சொல்லு?
பையா எனக்கு மெய்யாய் தெரியா தப்பா!

ஒட்டைச் சிவிங்கியாரே உம் கழுத்தும்
ஓங்கி உயர்ந்து நெட்டையாய்
நிற்கச் செய்வது யார் ; நினைவிருக்கா?
நிசமாய் கூறுகிறேன் தெரியாதப்பா!

பானை வயிறுயானையாரே உம்முகத்தில்
பருத்து நீண்டு தொங்கு துதிக்கை
பொருத்தி வைத்தது யார் சொல்?
போப்பா எனக்கு தெரியாதப்பா!

இத்தனையும் தந்தவர் யாரென உனக்கு
இதோ சொல்லுகிறேன் கேள் தம்பி
அத்தனையும் தந்தவர் அவரே இறைவன்
ஒருவன் அவனே எழ்வரைக்கடியான்

Monday, February 7, 2011

செல்வன் மிருதுன் மணிகண்ட பிரபு

குறள் எடு குரல் கொடு

அறிவை பெற்றிட குறளை படித்திடு
    அழிக்க   முடியா செல்வமிது
அடிகள் அனைத்தும் வெற்றிப்படிகள் தமிழன்
      மடியில் விழுந்த முக்கனிகள்
நிலையாய் அறிவை பெருக்கிட நாளும்
       குறளை நீயும் படித்திடு
மலையாய் புகழை ஆக்கிவிடும் வாழ்வு 
        மலரும், இன்பம் பெருகிவிடும்
குறளை அறிந்து வாழ்ந்தால் உலகில்
        குறைகள் ஏதும் நமக்கில்லை !
வள்ளுவன் வழியில் நடப்போம் ,கொண்ட
       கொள்கை தனிலே சிறப்போம் .

இல.சைலபதி 06/02/2011


குறள் எடு குரல் கொடு
திரும்பத் திரும்பப் பாராயணம்
உரைகள் விளக்கும் உபன்யாசம்
அர்த்தம் உணராமல்
உள்ளம் விடுத்து
உதடுகளில் நாமாவளி

வேதங்களைப் போல
ஆகிப்போனது
திருக்குறள் வெறும் முணுமுணுப்பாக

சுவர்களில் , பேருந்துகளில்
பாடப்புத்தகங்களில்
அலுவலகங்களில் எங்கும்
சாமி படம்போல
வள்ளுவனும் அவன் குறளும்

பொருள் பற்றிச் சொன்னது
நினைவிருக்க -அவன்
அருள் பற்றிச்சொன்னது
மறந்து போனது

அரசு, அமைச்சு ,துறவு என்று
அத்தனைக்கும் இலக்கணம் சொன்னான்
ஆனால் இன்று
ஒன்றில் கூட உரியவருக்கு இடமில்லை

தமிழ் சாதிக்கான
வேதமாகிப் போனது
குறள் - அதில் உரைசொல்லக்
கற்றவன் பூசாரியாக
சடங்குகளோடு நின்றுபோனது
அவன் உரைகள்

பூசாரியின் பிள்ளை பூசாரியாக
அதிகாரம் மொழியாலே
நிறுவப்படுகிறது- நாம்
யாரும் அறியாமலேயே.....

மொழியின் மீது
சிம்மாசனம் செய்தவன்
படிக்கட்டுகளிலா குறள்
படிந்து கிடப்பது?

இன்னுமொரு கோட்டம் செய்வோம்
வள்ளுவனுக்கு - இந்தமுறை
மனத்துள்ளே.....

உணர்வுகளின் பெருக்காலே
உயர்ந்த தொரு சிலை காண்போம்
உள்ளத்துள்ளே

உரிமைகளுக்கான
சாவிகள்
குறள்கள் உள்ளே குவிந்து கிடக்கிறது

இன்றே
குறள் எடு குரல் கொடு
இல.சைலபதி


Posted by Picasaகடந்த ஆண்டு புதுக்கவிதை பிதாமகர் ந.பிச்சமூர்த்தியின் வாரிசுகள் வாசலால் கௌரவிக்கப்  பட்டபோது

Sunday, February 6, 2011

கவிஞர் ஸ்ரீகாந்த் - கவிதை : பிறப்பொக்கும்

பிறப்பொக்கும்

பெற்றவள் குருதியது சிவப்பாயிருக்க
மற்றவள் உதிரம் மட்டும்
மறு நிறம் காணுமோ?

தாயின் மடி அடி
தவறிப்பிறந்தோம்
இதில் சூத்திரம் எங்கே?
மனு சாத்திரம் எங்கே ?

விழுந்தோம் இத்தரையில் நம்
விதியை முடிப்ப தற்கே

எல்லோரும் எனக்கு மட்டம்
என எகத்தாளம் போடுவோரே

எத்தொழில் செய்யினும்
ஏளனம் ஆகுமோ ?,

எண்ணிப் பார்ப்பீர் - சற்றே
மற்றவர்கள் மறுத்தே உம்மை
ஒதுக்கி வைத்தால்

மழிக்காத சடா முடி
கசங்கிய பட்டாடை
சுத்தமற்ற வீதி
துர் நாற்றமாய் கழிப்பறை

அடுக்கிக் கொண்டே போகலாம்
அவனின்றி நீ இல்லை

இத்தொழில் சிறிதென்றும் இஃது
ஏற்றமென்றும் சொல்லலாமோ.,

அறிந்தே செய்திட்ட
அவலங்கள் தீர்ந்திடவே

அய்யனும் சொல்லிச் சென்றான்
பாரதி ஏற்று வாழ்ந்தான்

பிறந்தோம் நிம்மதியாய்
வாழ்வோம் மனிதர்களாய்

எந்த நிறம் இருந்தாலும்
அவை யாவும் ஒரே தரமன்றோ

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமை யான்.
கவிமாமணி எதிரொலி விஸ்வநாதன் 

தோன்றிய நாள் தொட்டுத் துவளாமல் வாடாமல்
சான்றாக நிற்கின்ற சங்கநூல் -வான்புகழும்
அய்யன் வள்ளுவன் அளித்த ஆரமுதே
பொய்யில்லா பூவுலக நூல்

சீர்கெடப் பேசும் திரையுலகப் பாடலை
ஊர்கெட ஓதும் முறைவிட்டுப் -பேர்பெற்ற
கட்டுப் பதினெட்டுக் கீழ்கணக்கில் உள்ளதேன்
சொட்டும் குறட்பாவைச் சொல்

உப்புச் சப்பின்றி உன்னதமாய் நீதிகளை
செப்பும் சில நூல்கள் ! தீதற்ட முப்பலோ
மங்காத தங்கம் ! மறவாமல் போற்றி அதை
எங்கும் குரலைக் கொடு .

கவிஞர் பாலசீனிவாசன் வாசித்தளித்த கவிதை

திண்ணியம் எய்துவர்


எய்தலாம் தான் எவையும் என்றும்
எவரும் திண்மை திண்ணப் பெற்றால்
கொய்ய இயலா உயரம் ஒன்றில்லை
குறையொன் றின்றேல் குறை வொன்றில்லை


மாய்ந்து மாய்த்த பெருமை கைவரும்
ஆய்ந்து தோய்ந்த அழுந்து மனவளத்தால்
இடர்பட கெடுத்த தடைஇடை மடுத்தலும்
எதிர்த்தலும் விழுதலும் தவிர்த்தலை ஒழித்திடும்


கொஞ்சம் கொஞ்சமாய் ஏற்ற முகம்தான்
மிஞ்சும் ஏனைய மிஞ்சலும் வேண்டும்
பதியப் பதிந்தவை பாதை நெறிபட
விதிகளை உருக்கிட விடியலை வகுக்கலாம்


எண்ணியாங் என்பது அளவையின் நீட்சி
எண்ணம் என்பது ஆழ்தலின் தோய்வு
திண்மை என்பது செறிந்ததன் தேர்வு
திண்ணம் உண்மை கைவரும் எவையும்