வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Tuesday, February 7, 2012

கழுகுமலை ஸ்ரீகாந்த் கவிதை

துண்டங்களாய் நாம் பிரிந்து கிடந்த போதும்
நீர்த் திவலைகளால் எம்மை ஒட்ட வைப்பவளே.,

ஆழிப் பேரலை.,
ஆற்றொன்னாச் சூறாவளி
எனக் கதறுவோர்.,

அழகு முத்து,
பிணித்தீர்க்கும் பவளம்,
ருசிமிகும் மீனென
காசாகும் தருண மெலாம்
காதலிக்க மறந்து போய்.,

மைனாரிடி அரசுகளாய்
நில நாற்காலியில் அமர்ந்து கொண்டு
மெஜாரிடி உயிர்களின் கோபங்களை
சாபங்கள் எனப் பழிப்பதேனோ.,

உதயத்தில் நீலமாய்,
அந்தியில் செம்மையாய்,
கார் நிலவினில் வெள்ளையாய்.,
காட்சிக்குக் குளுமையாய்,
காலம் வென்றவளே.,

காலத்தின் கோலமதில் துருவத்தை உருக்கிவிட்டோம்.,
காசு பார்க்கும் ஆசையிலே ஓசோனில் ஓட்டையிட்டோம்.,
கழிவுகள் மொத்தமதை உன் காலடியில் கொட்டி வைத்தோம்.,
நின் கருவறைக்குள் சென்று கருணையின்றி கீறி வைத்தோம்.,

பொறுமையுடன் எமைக் காத்தாய்.,
பொங்கிடாது அமைதி கொண்டாய்.,

கூறுக்கு ஊர் இரண்டென, கூவியுனை விற்கும் கயவர்
கூட்டமதைக் கண்டவுடன்.,
வெகுண்டெழுந்தாய்.,வீசியடித்தாய்.,
எம்மை விழிப்புறச் செய்து விட்டாய்.,

உணர்ந்து கொண்டோம்., தாயே., ஆயின்
தவறிழைத்து விட்டாய்., அன்னையே.,
கயவர்கள் கரையில் இல்லை., ஆதலின்
உயரத்தைக் கூட்டி வருவாய்.,

துரியோனுக்கு உடனனால் கர்ணனுக்கும் சாவான்றோ.,

இயற்கை நீ., சக்தி நீ., சூத்திரம் நீ.,