வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Wednesday, March 16, 2011

கவிமாமணி எதிரொலி விசுவநாதன்

வாழும் வாழ்வே வரலாறு


வாழ்க்கை என்பது வரலாற்றேடு
வாழ்நாள் என்பது அதன்பக்கம்
மரணம் என்பது அதன் விலை 
மறுபதிப்பாவதே அதன் புகழ் 


மறக்கமுடியுமா மகாக்கவி பாரதியை -மீண்டும் ஒருவர் 
பிறக்கமுடியுமா இனிமேலே !அவர்போலே !புவிமேலே!
அந்நியர் ஆட்சியில் அச்சம் என்பதை ஆளப்புதைத்தனே 
அடிமை மக்களை தட்டி எழுப்பி ஆண்மை அளித்தானே
புண்ணிய பாரதம் போல் எது நாடென்று போற்றிப் புகழ்ந்தானே 
புதிய தீபமாய் தேச பக்தியை ஏற்றி மகிழ்ந்தானே 

தாயின் மணிக்கொடி வானில் பறந்திட கனவுகள் கண்டானே 
தாக்கிய புயலாய் தேசிய முழக்கம் தவம்போல் புரிந்தானே 
வந்தேமாதரம் !வாழியபாரதம் !என முரசறைந்தனே
வென்றால் சுதந்திரம் இன்றேல் மரணம் என்றுயிர் கொடுத்தானே
புவிப்புகழ் போதும் என நாற்பது முன் புறப்பட்டுப் போனானே
வாழும் வழியே வரலாறொன்றை வழங்கிச் சென்றானே!


வாழ்க்கை என்பது வரலாற்றேடு
வாழ்நாள் என்பது அதன்பக்கம்
மரணம் என்பது அதன் விலை 
மறுபதிப்பாவதே அதன் புகழ் 

வாசல் எழிலன்


வாழும் வாழ்வே வரலாறு 

மண்ணுக்குள் ளிருந்துவந்த போதும் மக்கள் 
   மகிழுதற்கே மின்னுகின்ற பசும்போன் னைபோல்
விண்ணுக்குள் குடியிருந்தும் அழகை காட்டி 
    வேதனையை ஒழிகின்ற வெண்ணி லாப்போல 
பண்ணுகுள் இருந்தாலும் பாட்டாய் ஆகிப்
    பசிமற்க்கச் செய்கின்ற இசையி னைப்போல்
தன்னலத்தை மறந்தவராய்ப் பிறர்க்கே வாழும் 
    தலைவர்வாழ் வேவரலா ராகு மன்றோ !

 இனமோங்கும் எண்ணத்தில் இருத்த வாரே
    இன்னலென வந்தபோதும் எழுச்சி காட்டும்
மனத்தினையேகொண்டோரும் பிறரே வாழ
    மனம்கொண்டே துணையாகி வலு வோரும் 
குணத்தினிலே கொள்கையினை மாற்றா தாராய்
     குன்றனவே உறுதியிலே நிற்கின் றோரும்
பணத்தினையே கருதாமல் பழகு வோரும்
     பல்லாண்டு வரலாறாய் ஆவர் அன்றோ !

இளசை கிருஷ்ணமூர்த்தி

#கேள்வி கேட்க்கக் கற்றுத்தந்தவன் ...
  சாக்ரடீஸ் 
  விஷக்குப்பியின் முத்தத்தில் 
  சரித்திரம் அவனை அச்சடிதுக்கொண்டது !

# மஞ்சள் மணம் மாறாத மனைவியுடன் 
   மஞ்சனை சேராமல் 
  மரணத்தின் கயிற்றை மகிழ்ச்சியுடன் 
  அணிந்துகொண்ட 
  பகத்சிங்கை 
  தன பக்கங்களில் சித்திரமாய் பதித்துக்கொண்டது 
  வரலாறு 

#வறுமையின் கொடுமையிலும் வடித்த கண்ணீரெல்லாம் 
  அடிமைத்தளை நீக்க ...
  அக்கிணிக்கவிதைகளை 
  அண்ணைத் தமிழில் 
  ஈன்றெடுத்த பாரதியை 
 வரலாறு 
 அணைத்துக்கொண்டது அகம் மகிழ !

# அங்கும் இங்குமாய் புகைந்துகொண்டிருந்த 
  சுதந்திரத் தீயை
  அகிம்சை நெய்யால் வேள்வியாய் வளர்த்த 
  மகாத்மா 
  உலக வரலாற்றின் 
  உன்னதம் !

# கதாநாயகர்கள் மட்டுமல்ல 
  சில 
  வில்லன்களும் ...
  ஹிட்லர் 
  முசோலினி 
  ரூசோ
  என்று தொடங்கி 
  ராஜபக்சே வரை ...
  வரலாற்றின் பக்கங்களில் 
@ எதற்க்காகவேணும் உங்களை 
    அர்பணித்துக் கொள்ளுங்கள் 
    வரலாறு உங்களை 
    வளைத்துக் கொள்ளும் ...
#  வரலாற்றில் என் பெயரையும் 
    பதிவு செய்ய வேண்டும் !
    அதற்கு முன் 
    வாக்காளர் பட்டியலில் 
    என் பெயரைப் 
    பதிய வேண்டும் ...


Tuesday, March 15, 2011

ஸ்ரீனி அரவிந்த்


வாழும் வாழ்வே வரலாறு

இரவும் பகலும் தினமும் வருவதற்கும் 
நீயும் நானும் பிறந்து இறப்பதற்கும் 
அர்த்தம் சேர்ப்பது நடுவின் நிகழ்வுகள்தாம்!

அர்த்தமுள்ள வார்த்தை வரிசை வாக்கியமாகும்.
பயன் தரும் வாக்கியம்தான் பொன்மொழியாகும்!

காந்தியின் அகிம்சையும் பகத்சிங்கின் வீரமும் 
பாரதியின் கவிதையும் விவேகனந்தரின் சகோதரத்துவமும் -உன்
வாழ்வில் பிரதிபலிக்காமல் உனக்கென்ன பயன்
அதனால்  இந்த ஊருக்கென்ன பயன்!

ஓடும் நீர்தான் ஊருக்கு நன்மை!
தேங்கி நின்றால் நாறும் தன்மை!

நேற்றைய மனிதரின் வாழ்கையின் சாரம் 
இன்றைய உலகம் பின்பற்றி வாழ்ந்தால் 
வாழும் வாழ்வே வரலாறாகும்அன்றி
என்றாவதொருநாள் பழங்கதையாய் மறந்து போகும்!

Sunday, March 13, 2011

கவிஞர்.இர.கணேஷ் கவிதை


ஓடி ஒளிந்து
ஞானம் பெற்று
போதனை புரியும்
துறவியைக் காட்டிலும்

ஒரே குடிசையில்
மனைவியை மகிழ்வித்து
பெற்றொரையும் பிள்ளையும்
பேணி காக்கும்
இல்லரத்தானின் வாழ்வே
வாழும் வரலாறு’

இங்கு முடிந்தவன் சாதிகிறான்
முடியாதவன் போதிக்கிறான்

ஈரைந்து ஆண்டுகளுக்கு மேல்
திங்களின் முதல் ஞாயிறை
கவி-ஞாயிறாக்கிய
வாசலின் வாழ்வே
வசந்த்தின் வரலாறு

பால.சீனிவாசன் கவிதை


வாழும் வாழ்வே வரலாறு

அரிது அரிது
அரியது எவையும்
செய்ய அரிது
வாழ்வு
இயல்பின் அரிது

உலகியல் எளிதே
எளியதில் மீழ்வது அரிது

உணர்வினில் ஆழ்வது
வாழ்க்கை
உணர்தற்கு மீட்பது
உணர்ந்து மீள்வது

பிழைப்பு எளிது
எளிதில் ஆழ்தலால்

உட்கிடை உனர்வை
வாழ மீட்டல்
வாழ்வு

பாதையில் நடப்பது
பிழைப்பு
பாதையை சமைப்பது வாழ்க்கை

சூழல்
சூழலில் மூச்சுத்திணறல்
பிழைப்பின் அடையாளம்

காலம் கடந்த
கருத்துக்காட்சி
வரலாற்றுச் சுவடி,சுவடு
ஆளுமையெ வாழ்க்கை
ஆட்சி முறையெ வரலாறு

எந்தப் பதிவிலும்
நிலைப்பதில்லை
வழியாக்கப்பட்ட வரலாறு
புரட்ச்சிகளோடு கைகோர்த்து கொள்வதில்ல
புரட்ச்சிகளோடு புலங்குவது
அதிலே துலங்குவது
அதற்குள்ளே தலை எடுத்து
விளங்குவது.....வாழ்க்கை
அதன் எழுத்தே
வரலாறு

Saturday, March 12, 2011

வாசல் வசந்தப்பிரியன் - தலைவர் வாசல் கவிதை அமைப்பு


வாழும் வாழ்வே வரலாறு

அழுது கொண்டே பிறக்கிறோம் - பிறரை
அழ வைத்து இறக்கிறோம் !
இடைப்பட்ட வாழ்க்கையோ பலவாறு - அதில்
இடம்பெற்று விடுவதே ' வரலாறு ' !

வாழ்வின் அடிப்படை 'மனிதம்' ! - ஒரு
வரலாறு ஆக்கல் 'புனிதம்' !
சென்றடைவோம் சிவலோக பதவி - அதற்குமுன்
செய்திடுவோம் சிலபேர்க்கு உதவி !

உணர்வுகள் மனதைத் தொடும்வரை - பல
உறவுகள் என்றும் தொடர்கதை !
உயிர்களை வாழ்வு பாராட்டும் - அதில்
உன்னதம் அன்றோ தேரோட்டம் ?

உலகம் பலவிதம் இயங்கும் - சில
உண்மைகள் வெளிவரத் தயங்கும்  !
நிதர்சனம் எல்லாம் பல சாட்சி - வரும்
விமர்சனம் காட்டும் மனசாட்சி !

இரக்கம் உதவும் கரமாகும் - அது
இறைவன் தந்த வரமாகும் !
உறவுகள் போற்றிக் குலவிடும்வோம் - சிறு
உதவிகள் புரிந்து உலவிடுவோம்  !

வாழ்கை என்பது வரலாறு - இடையில்
வருமே பற்பல இடையூறு  !
சுற்றிலும் வெற்றிகள் வசமாகும் - அதை
பெற்றபின் சொர்க்கமும் நிசமாகும் !

மனிதர் மத்தியில் நடமாட்டம் - அதற்கு
இடையில் எதனை இடமாற்றம் ?
நினைவில் நிற்போர் சிலபேரே ! -எழும்
நீரின் குமிழி பலபேரே !

தொடங்கும் இடமோ  கருவறைதான் - உடல்
முடக்கும் இடமோ கல்லறைதான் !
வாழ்கை இங்கே விடிகிறது - ஒருநாள்
வாழ்க்கைப் பயணம் முடிகிறது !

வாழ்க்கை என்பது தவமாகும் - அது
வாழும் புண்ணியத் தலமாகும் !

காலங்கள் யாவும் மெய்பாடும் - எடுத்த
காரியம் யாவும் கைகூடும் !

பாதையில் வெற்றி மலர்தூவும் -ஒரு
பார்வையைச் சுற்றி மனம்தாவும் !

உலக வாழ்வே  சாகசம்தான் - அதை
உணர்ந்து  வாழ்தல் சாதனைதான் !

வையகம் உணர்ந்தும் பலநூறு - அதில்
வாழும் வாழ்வே வரலாறு




Friday, March 11, 2011

FRIDAY, MARCH 11, 2011

செல்வன் மிருதுன் மணிகண்ட பிரபு


 வாழும் வாழ்வே வரலாறு 

கல்வி நமக்கு கண்ணாகும் 
கற்பவை அனைத்தும் பொன்னாகும் 
கற்றவர் வழியில் நடந்தால் 
பெற்றவர் மனமே நலமாகும் : 

மண்ணில் தானே போன்னுமிருக்கு !
விண்ணை தொடும் ஆற்றல் நம்மிலிருக்கு! 
பொன்னும் பொருளும் பெருமை தரும் 
பொறுமை நமக்கு புகழை தரும் 

அன்னைக்கு உண்டு மன்னிக்கும் மனம் ,
தமிழ் சொல்லுக்கு உண்டு இனிக்கும் குணம் ,
தட்டி கேட்கின்ற  உரிமை வேண்டும் 
மூத்தோரை மதிக்கவும் வேண்டும்

தேடலிருந்தால் தெழிவு வரும் , 
திறமை இருந்தால் உலகே வரும் , 
இயக்கம் அனைத்தும் நாமானால் 
இனிக்கும் வாழ்வே நமக்காகும்! 

                        ஏன் ?

வங்க  கடல் வழிவிட்டு ஒதுங்கிவிடும் 
வனும் இறங்கி வந்து நம்மை வாழ்த்திவிடும்
நாம் வாழும் வாழ்வே வளமாகும் வரலாறு ஆகும் .

Sunday, March 6, 2011

கவிஞர் கழுகுமலை இல ஸ்ரீகாந்த்- கவிதை

வாழும் வாழ்வே வரலாறு

நித்தம் நித்தம்
புத்தரின் காலடியில் பிட்சுகளுக்கு
இந்தியப் பிணங்களின் படையல்

அட்டைகள் கூட விட்டுவிடும்
அளவு அதிகமானால்
இந்த அரக்கர்கள் வெறி
அடங்குவதாயில்லை

உணவாக காத்திருந்த மீன்கள் கூட
உயிர் விடும் தமிழன் பார்த்து
செலுத்து கிறது கண்ணீர் அஞ்சலி

மறைந்து போன இனங்களுக்கு
நிதம் மடியும் இனங்களின்
மனித உரிமைகள் காக்க தவறும்
திராணியற்ற அரசுகள் உள்ளவரை
அனுதினம் வாழ்வே சாவாகிபோகும்

புத்தனே மௌனம் கலைந்து
புத்திமதி சொன்னால்
அவன் வாய் அடைக்க
மனிதக் கறி வைக்கும்
மிருகங்களுக்கு எதிராய்
வாழ்வுரிமைக்காய் போராடும்
எம் தமிழர்., வாழும் வாழ்வே வரலாறு