வாசல் கவிதை அமைப்பின் வலைத்தளம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உங்கள் ஆதரவிற்கு நன்றி!!!
திங்களின் முதல் ஞாயிறு எங்களின் கவி ஞாயிறு: காலையில் கூடுவோம் கவிதைகள் பாடுவோம்

Saturday, May 14, 2011

செல்வன் மிரிதுண் மணிகண்டபிரபு

                                                பூக்கட்டும் புதுமை பூக்கள் 


இமயமும் குமரியும் இணையட்டும் 
கங்கையும் காவிரியும் சேரட்டும் 
காற்றும் வானமும் சரித்திரம் படைக்கட்டும் !
ஆதவன் சிதறிக்கண்ட பூமிக்குள் பூகம்பம் 
ஆற்றாத துயராக புயல் மழையின்
தாண்டவம் இனி இல்லாது போகட்டும் !

வாட்டும் சோக வடுக்களெல்லாம் வாரதுபோகட்டும் !
வெட்டு வைக்கும் தீவிரவாதம் வேரோடு அழியட்டும் !
மெல்லக் கதிர்வீசி சூரியனும் உலா வர 
அளவோடு மழை பெய்து வளமோடு வாழட்டும் !

நேற்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும் விட்டு 
தென்றல் தவழ்ந்துவர இதயத் தோட்டத்தில் 
பூக்கட்டும் புதிய பூக்கள் மொட்டுக்கள்விரிய!

Friday, May 13, 2011

கவிஞர். இளசை கிருஷ்ணமூர்த்தி

                                                        பூக்கட்டும் புதுமை பூக்கள் 

என் கொல்லைப்புறத்து
தோட்டத்தில் 
பூக்கள் சிரித்தன .
 என் நிலம் 
பழுதில்லாது பலன்தந்தது .

நான் எந்தப் பூவையும் 
விலைக்கு வாங்குவதில்லை 
மற்றவர்களைப் போல 

என் பூந்தோட்டத்தை 
எட்டிப்பார்த்த 
பூவியாபாரி 
என் தோட்டத்தில் 
பார்த்தீனியம்  விதைகளை 
வீசி விட்டான்

இப்போது 
பூக்கள் மலர்வதில்லை 
களர் நிலத்தில் 
கட்டிடங்கள் .........
வியாபாரியின் பூக்கள் 
விற்பனை அமோகமானது .........

என் கல்லறையில் 
பூவைபதற்கும் 
கையேந்தவோ !

புதிய நிலங்களை
கண்டெடுப்போம்!
நம் தோட்டத்தை 
நோட்டம் விட 
முடியாதபடி 
காவல் செய்வோம் 

புதிய நிறங்களுடன் 
பூக்கட்டும் 
புதுமைப் பூக்கள்

Wednesday, May 11, 2011

கவிஞர் தி.கண்ணன்

                                                             " பூக்கட்டும் புதிய பூக்கள் ! " 

சிங்கத்தின் பிடியிலா
சிறுத்தையின் வாயினிலா
மனித மான்களின் 
விழிகள் பிதுங்குகிறது ;
இருளடர்த்த காடுகளில் 
ஒளிபூவை தேடி.....

எருக்கம்பாலும் 
ஊமத்தம்  பூவும் 
ஊமைகளின் குடலையும் 
உடலையும் அணிவகுக்க 
கனவுகளில் மட்டுமே
ரோஜாபூ.

காணல் நீரில் 
குடிநீர் குடிக்கும் 
ஒட்டகங்களில் 
நினைவுகளில்தான் நிழலாடுகிறது 
சோலை பூக்கள் 
  
தோண்டினால் வரும் 
நம்பிக்கை மணற்கேணி 
தோண்ட தோண்ட வருகிறது 
நில அதிர்வும் சுனாமியும் 
உடைந்த  கண்ணாடியில் 
ஒட்டவைத்து 
உருவம் பார்த்திடவும் ;

ஒற்றை அரிசியில் 
குறள் எழுதவும் !
படிக்கவும் 
உலகசாதனையை - எம் 
பிஞ்சு விரல்கள் 
உலுக்கிடவும் 
இனி 
நிதம் நிகழும் 
நிஜம் 
நிஜ நீரூற்றில் 
இளம் பூக்கள் 
இனிய காலையை 
எழச் செய்யும் 
இருள் உடைந்திட 
மனிதம் மலர்ந்திடும் 
பேதத் தீ மடிந்திட 
கள்ளி(ளு)ப் பாலில் 
கண்ணீர்ப் பூக்கள் 
விளையாது 
அக்கினிப் பூக்கள் 
பூத்திட
பூக்கட்டும் புதிய பூக்கள்

கவிஞர் . பாலசீனிவாசன்

 "பூக்கட்டும் புதுமைப் பூக்கள் !"


வேண்டாம் !
பூக்கள் 
புரட்சி என்ற 
புதிய பெயரில் 
                                                            வேண்டவே வேண்டாம் 
                                                            போர்க்குணம் 
                                                             புதிதாய் 
                                                             பூக்கள்ளுக்கு

புயல் ,
நெருப்பு ,-
வேகம் , சூடு 
உடைகளைப் 
போர்த்தியபடி பூக்கவேண்டம் 
புதிதாய் - பூக்கள் 
                                                                 
                                                             பூக்கவேண்டும் 
                                                             பூக்கள்வேண்டும்
                                                             புதியவகையாய் 
                                                             இயல்பாக 

இதழ் அழகு மாறட்டும் 
இன்னும் அழகாய்
இதமான நாற்றம் வீசட்டும் 
இன்னும் தொலைவிற்கும் 
ஈர்ப்பு நிறம் காட்டட்டும் 
விழியற்றவன் விழிக்குள்ளும் விழும்வகையில் 
புதிய பூ இருப்பதைவிட இன்னும் பெரிதாய் 
புதிதாய் பூப்பதனால் ! பூக்கள் .
                                                 
                                                

வாசல் வசந்தப்பிரியன் -தலைவர் வாசல் கவிதை அமைப்பு

                        
                    "  பூக்கட்டும் புதுமைப் பூக்கள் ! " 


புறப்படத் தயாராகும் பூக்களே ! - உங்கள் பயணம் 
மலர்மாலையில் தொடங்கவா ?- மலர்வளையத்தில் முடங்கவா ?

தினந்தோறும் தன்னிபோடும் செடிக் கணவனின் 
மனங்கொள்ளும் வகையில் இதழ்விரிக்கும் மனைவிப் பூ !

இதழ்மலரும் ரோஜாவே !- நீ ஒரு - இலங்கைப் பெண்ணா ?
உன்னைச் சுற்றிலும் உருவானதுதானே ' முள்வேலி ' !

கடவுளர் சிலைகள் ஆன்மிகத்தின் தனிஉடைமை 
சிலைமீது படர்தல் பூஜைப்பூக்களின் தனிஉரிமை !

பற்றைக் காட்டப் பலவழிகள் இருந்திடினும் 
ஒற்றை ரோஜா மலர்கொடுத்து உவந்திடுவர் காதலர்கள் !

மண்ணில் புதைகின்ற விதைகள் எழுச்சியில்தான்
செடியில் பூக்கின்ற பூவும் புரட்சியாகும் !

புல்லாங் குழலுக்குள் புகுந்துவரும் காற்றேதான் 
நல்லிசை தவழ்கின்ற சங்கீத ஊற்றேயாம் !

மட்டைகள் எல்லாம் செடிகளாய் மாறினால் 
பந்துப்பூக்கள் ஆறு -நான்கென பறந்தோடி மலரும் !

பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை குறிஞ்சிப்பூ மலரும் 
பதின்மூன்றுக்குப் பிறகுதான் இங்கே ஆட்சிப்பூ மலரும் !

குமணன் என்றால் கொடைக்கெல்லாம் மேனிலை 
' ரமணன் ' என்றால் தட்ப வெப்ப வானிலை !

இளமை இங்கு பூக்கலகப் பூக்கட்டும் 
இளைஞர் நன்கு நாடுதனைக் காக்கட்டும் ! 

பூச்சூடும் பூவையரும் அணி திரளட்டும் 
பூமிதனில் புத்துணர்வு நனி மிரளட்டும் !

இலக்கியப் பூ மணம்வீசும் சோலை ஆகட்டும் 
கவிதைமயில் அதில் அழகு நடனம் ஆடட்டும் !

வாசமலர்க் கவிதையெல்லாம் சிந்து பாடட்டும்
' வாசல் ' மேடை வந்துநின்று ஒன்று கூடட்டும் !

புறப்படும் வாய்வழியே புலமைப் பாக்கள் 
பூக்கட்டும் வாசலிலே புதுமைப்  பூக்கள் 

கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி

கவிநயச் செல்வர் மன்னை பாசந்தி

Tuesday, May 3, 2011

கவிஞர் கழுகுமலை ஸ்ரீகாந்த் கவிதை

பூக்கட்டும் புதுமைப் பூக்கள்

ஜனநாயகப் பித்தர்களுக்கு
தேர்தல் எனும் போதை மாத்திரை

புழக்கடைப் பாட்டிகளும்
புதுப் புதுக் கரன்சிகளுக்காய்
வாசல் திண்ணையில் படுக்கை
அனாதைகள் ஆதரவாளர்களானர்கள்

ஐந்தண்டுகள் தூங்கிக்கிடந்த கும்பகர்ணர்கள்
ஐஸ் வாட்டர் தெளித்து
அவசர அவசரமாய் எழுப்பப் பட்டனர்
அவர்களின் தூங்கா விரதம்
ஐம்பது நாட்களுக்கு மட்டுமே .
எனவே அணுகும் அத்துனை இலவசமும்
இவர்கள் தனதாக்க அவசரம் காட்டினர்

நடப்பவை புரியும் முன்னர்
இவர்களின் சுட்டு விரல்
மருதாணி இட்டுக் கொண்டது

காதைக் கிழிக்கும் கம்பீர ஒலி எடுத்து

கடமை முடிந்ததாய் எண்ணி
மீண்டும் தூங்கிடாதீர் என்றே
உரக்கக் கூச்சலிட்டபடி
ஒய்யாரமாய் மொட்டவிழ்ந்தது
ஜனநாயகப் பூ ஒன்று


ஆணையிட்டது என்னிடம்

எடுத்துச் செல் இன்முகத்தோடு
சூடிக் கொள்வாள் உன் தலைவி
விலையேதும் தரவேண்டாம்
வீதியிலும் எறிய வேண்டாம்
வேதனைகள் ஒதுக்கி வைத்து
சாதனைகள் புரிய வைப்பேன்
எடுத்துச் செல்இன்முகத்தோடு

அடுத்த தடுத்த
அற்புத கோஷங்கள் கேட்பீர்

நான் இலவசங்களில் உயர்ந்தவன்
எனக்கு நிகர் எதுவுமில்லை
என் பைத்தியத்திற்கு நானே மருந்து
நான் உமிழும் வெளிச்சத்தில்
விட்டில் பூச்சியாய்
வலம் வரும் வாக்குறுதிகள்
விடியும் முன் செத்துப் போகும்
என்றே
டம டம வென
கொட்டடித்தன அப்பூக்கள்

ஆதவன் மெல்லச் சிரிக்க
தேசமெனும் தோட்டமெங்கும்
கொத்து கொத்தாய்
ஜனநாயகப் பூக்கள் மலரக் கண்டேன்
அதன் நறுமணத்தில் முயங்கிப் போய்
என்றன் மார்பில் சரிந்தாள் தலைவியுமே
முகர்ந்து விட்டேன் வாசம் தன்னை
தொலைத்து விட்டேன் தூக்கமதை
ஆதவனும் குளிர்ந்து போனான்
அழகாய் காதலித்தேன்
எந்தனது தலைவியையும்
என்னுயிர் தேசத்தையும்

பாடிக் களிப்போம் சூடி மகிழ்வோம்
பூக்கிறது புதுமைப் பூக்கள்
பாரீர் பாரீர் .